LOADING...
இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்
எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்

இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2025
11:42 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நியாயமான மதிப்பீட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும். பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளில் வினாத்தாள்களின் கடினத்தன்மை வேறுபடும் என்பதால், அனைவருக்கும் நியாயமான மதிப்பெண்களை உறுதி செய்ய சமன்படுத்தும் முறை அவசியம் என்று எஸ்எஸ்சி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியுள்ளது. முன்பு, இந்தச் செயல்முறை அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சராசரி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது அதைவிடத் துல்லியமான சம சதவிகித முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

விபரம்

புதிய சம விகித முறை எப்படி செயல்படும்?

புதிய சம சதவிகித முறையில், ஒரு விண்ணப்பதாரரின் மதிப்பெண், அவர்களின் ஷிஃப்டில் உள்ள மற்ற விண்ணப்பதாரர்களின் செயல்திறனுடன் ஒப்பிட்டு ஒரு சதவிகித மதிப்பெண் தீர்மானிக்கப்படும். உதாரணமாக, ஒரு ஷிஃப்டில் 80% விண்ணப்பதாரர்களை விடச் சிறப்பாகச் செயல்படும் ஒரு விண்ணப்பதாரர், மற்றொரு ஷிஃப்டில் அதே சதவிகித மதிப்பெண் பெறும் ஒருவருக்குச் சமமானவராகக் கருதப்படுவார். இதனால், கடினமான வினாத்தாளை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது. இது அரசு வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளில் தேர்வர்களின் நியாயமான ஒப்பீட்டிற்கு உதவுகிறது. புதிய முறை, தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் நியாயத்தையும் மேம்படுத்தும் என்று ஆணையம் நம்புகிறது.