LOADING...

14 Sep 2025


மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை

இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு

இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை விஞ்சி ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் ஏமி சாட்டர்வெய்ட்டை முந்தி, ஏழாவது அதிக ரன்களைக் குவித்த வீராங்கனையாக புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.

என் மூளையின் மதிப்பு ₹200 கோடி; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் கொள்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி

பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார்.

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: மெசேஜ் பதில்கள் இனி தனி Threadகளாகக் குரூப் செய்யப்படும்

வாட்ஸ்அப் தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்? இந்த ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலான மக்கள் தக்காளியைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, அதனைப் பிரிட்ஜில் சேமித்து வைக்கிறார்கள்.

விக்சித் பாரத், விக்சித் அசாம்: ₹18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

100 சதவீத அந்நிய நேரடி முதலீடு? காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் வகையில், காப்பீட்டுத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மதிப்பீட்டில் முன்னேற்றம்; 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுஸூகி ஸ்விஃப்ட், அதன் பாதுகாப்பு மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

உடல் எடை குறைப்பு ஊசிகளின் பின்னால் உள்ள ஆபத்துகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தற்போது உடல் எடை குறைப்பு ஊசிகளை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (செப்டம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஹர்பஜன் சிங் நியமனமா? பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முன்மொழிவு என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்

புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை

பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.

யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்

இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 2025 உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

13 Sep 2025


இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பு

மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான ஆறு கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மீதான வழக்கில் இடைக்கால உத்தரவை செப்.15இல் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்க உள்ளது.

வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்

இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.

நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஹேங்கொவரைப் போக்க தண்ணீர் மட்டும் போதாது; ஆராய்ச்சி சொல்வது என்ன?

ஒரு இரவு முழுவதும் குடிபோதையில் இருந்த பிறகு, தலைவலி மற்றும் குமட்டலுடன் காலையில் எழுந்திருப்பது ஒரு விரும்பத்தகாத அனுபவம்.

திருமணப் பரிசுகளுக்கும் வருமான வரி செலுத்த வேண்டுமா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

இந்தியாவில், திருமண நிகழ்வுகளில் குடும்பத்தினரிடையே பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது ஒரு பொதுவான பாரம்பரியமாகும்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈஷா சிங் தங்கம் வென்றார்

சீனாவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் (ISSF) உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய விளையாட்டு வீராங்கனை ஈஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நான் தான் சிஎம்; புதிய படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பார்த்திபன்

தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், தனது அடுத்த படமான "நான் தான் சிஎம்" என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார்.

டிவிஎஸ் ஜூபிட்டர் 110 ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது பிரபலமான ஸ்கூட்டரான ஜூபிட்டர் 110 இன் (Jupiter 110) புதிய ஸ்டார்டஸ்ட் பிளாக் ஸ்பெஷல் எடிஷன் (Stardust Black special edition) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சொன்னீங்களே செஞ்சீங்களா? திருச்சியில் திமுக மீது தவெக தலைவர் விஜய் சரமாரி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், வரும் தேர்தலை ஜனநாயகப் போர் என்று குறிப்பிட்டு, தனது பிரசாரப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார்.

பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.

எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது; 10 மடங்கு ஊழியர்களை புதிதாக பணியமர்த்த திட்டம்

எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான எக்ஸ்ஏஐ (xAI), தனது தரவு தொகுப்பு (data annotation) பிரிவில் பணிபுரிந்த 500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி: மணிப்பூர் மேம்பாட்டுக்கு ஊக்கம்

மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

சவரனுக்கு ₹160 சரிவு; இன்றைய (செப்டம்பர் 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, சனிக்கிழமை (செப்டம்பர் 13) சிறிது சரிவைச் சந்தித்துள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்றார்; முதல் பெண் பிரதமராக சாதனை

நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, நாட்டின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.