LOADING...
இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பு
இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2025
08:00 pm

செய்தி முன்னோட்டம்

மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான ஆறு கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டியதற்காக, வரி செலுத்துவோர் மற்றும் வரி நிபுணர்களுக்கு, தனது சமூக ஊடகப் பக்கமான எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை நன்றி தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்குப் அபராதம் விதிக்கப்படும். வரி செலுத்துபவர்களுக்கு உதவுவதற்காக, வருமான வரித்துறை 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை அமைத்துள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

அழைப்புகள், நேரடி உரையாடல்கள் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, வருமான வரித்துறை கடந்த மே மாதத்தில் வருமான வரி படிவங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, காலக்கெடுவை ஜூலை 31 இல் இருந்து செப்டம்பர் 15 க்கு நீட்டித்தது. சமீபகாலமாக, வருமான வரி கணக்குத் தாக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது. மதிப்பீட்டு ஆண்டு 2024-25 க்கு, இந்தியாவில் 7.28 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டைவிட 7.5% அதிகமாகும்.