
இன்ஸ்டா ட்ரென்ட்ஸ்: 'Nano Banana' 3D ட்ரெண்ட் என்றால் என்ன? தெரிந்துகொள்வோம்
செய்தி முன்னோட்டம்
சமூக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்னர் ஜிபிலி இமேஜ்கள் ட்ரெண்ட் ஆனது. தற்போது அதே இடத்தை நிரப்ப வந்துள்ளது கூகிளின் 'Nano Banana'. வைரலாகி வரும் புதிய AI ட்ரெண்ட் உங்கள் புகைப்படங்களை அசல் போலத் தோன்றும் மினியேச்சர் சிலைகளாக மாற்றும். இது Google Gemini AI மூலம் இயக்கப்படும் ஒரு ஸ்மார்ட் மற்றும் இலவசமான வசதியாகும். Google Gemini-இன் புதிய ப்ராம்ட் அடிப்படையிலான இமேஜ் ஜெனரேஷன் மூலம், உங்கள் புகைப்படங்களை வணிக ரீதியாக விற்கப்படும் collectibles சிலைகள் போல 3D வடிவத்தில் உருவாக்க முடிகிறது. இந்த புகைப்படங்கள், மேசையின் மீது வைக்கப்பட்ட வட்டமான அக்ரிலிக் தளங்களில் காணப்படும் சிறு சிலைகள் போல தோற்றமளிக்கின்றன.
செயல்பாடு
'Nano banana' என்பது என்ன?
'Nano Banana' என்பது Google Gemini-இல் பயன்படுத்தப்படும் ஒரு வைரல் ப்ராம்ட், இது குறிப்பிட்ட miniature statue aesthetic ஐ உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் புகைப்படத்தில் உள்ள நபர், செல்லப்பிராணி அல்லது பொருளை, 3D சிலையாக மாறவைக்கிறது. Google Gemini-இன் அதிகாரப்பூர்வ X (முன்பு Twitter) கணக்கில் வெளியிடப்பட்ட இந்த போக்கு, தற்போது Instagram, Threads மற்றும் X போன்ற வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகிறது.
வழிகாட்டி
Nano Banana ட்ரெண்டை எப்படி முயற்சிக்கலாம்?
1: Google Gemini-ஐ திறக்கவும்: உங்கள் மொபைலில் உள்ள Gemini செயலியில் அல்லது [Gemini வலைத்தளத்தில்](https://gemini.google.com/) உள்நுழையவும். 2: புகைப்படத்தை பதிவேற்றவும்: உங்களது தனிப்பட்ட புகைப்படம், செல்லப்பிராணியின் படம், குடும்ப போட்டோ என எதையும் தேர்வு செய்யலாம். தரமான, உயர்தர படத்தை பயன்படுத்துவது சிறந்த ரிசல்ட்டிற்கு வழிவகுக்கும். 3: ப்ராம்ட் வழங்கவும்: Gemini-இல் பின்வரும் மாதிரி ப்ராம்ட்டைப் பயன்படுத்துங்கள்
ப்ராம்ட்
மாதிரி ப்ராம்ட்
"Create a commercialized miniature statue at 1/7 scale based on the character in the photo. The statue should be in realistic style, placed on a computer desk, mounted on a round transparent acrylic base with no text. Next to the statue, show a collectible-style packaging box with printed artwork and two flat 2D reference illustrations."
வழிகாட்டி
உருவாக்குதல்
4: உருவாக்கவும்: "Generate" அல்லது "Create" என்பதை கிளிக் செய்யவும். சில நொடிகளில், உங்கள் 3D சிலை-போன்ற படம் உருவாகும். சிறந்த முடிவுகளுக்கான குறிப்புகள்: 1. உயர்தர புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். 2. சிலையின் நிலை, வடிவம், சுற்றுப்புற அமைப்பு போன்றவற்றைப் ப்ராம்ட்டில் தெளிவாக குறிப்பிடுங்கள். இது ஜெமினி 2.5 ஃப்ளாஷ் மூலம் இயக்கப்படும் ஒரு AI பட எடிட்டர் ஆகும்.