
செப்டம்பர் 15 முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு; இவர்களுக்கு மட்டும்!
செய்தி முன்னோட்டம்
தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது. செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிதாக்கும். புதிய வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு செலுத்தப்படும் பணத்திற்கான ஒரு நாள் பரிவர்த்தனை வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த வரம்புகள் நபர் வணிகருக்கு செலுத்தும் (P2M) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நபர் இன்னொரு நபருக்கு செலுத்தும் (P2P) பரிவர்த்தனைகளுக்கான ஒரு நாள் வரம்பு ₹1 லட்சமாகவே நீடிக்கும்.
திருத்தம்
திருத்தப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள்
திருத்தப்பட்ட வரம்புகள் பல சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மூலதனச் சந்தை முதலீடுகள், காப்பீட்டு பிரீமியங்கள், அரசு பரிவர்த்தனைகள் மற்றும் பயணத்திற்கான பரிவர்த்தனை வரம்பு ₹1 லட்சம் அல்லது ₹2 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான ஒரு நாள் வரம்பு ₹10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரெடிட் கார்டு பில் பரிவர்த்தனைகள் மற்றும் கடன் தவணைத் தொகை வசூலுக்கான வரம்பும் ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு இது ஒரு தீர்வைக் கொடுக்கும் என்றும், ஒரே ஒரு பரிவர்த்தனையில் பெரிய தொகையைக் கையாள உதவும். புதிய வரம்புகள், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.