
இரண்டாவது நாளாக மாற்றமில்லை; இன்றைய (செப்டம்பர் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. எனினும், வியாழக்கிழமை (செப்டம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. விலை மாற்றமில்லாமல் தொடர்வது இது இரண்டாவது நாளாகும். இதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10,150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹81,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹11,073 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹88,584 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹8,405 ஆகவும், ஒரு சவரன் ₹67,240 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் மூன்று நாட்களாக மாற்றமின்றி நீடிக்கிறது. வெள்ளி விலை வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹140 ஆகவும், ஒரு கிலோ ₹1,40,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.