உலகம்: செய்தி

16 Oct 2023

ஈரான்

பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் தருஷ் மெஹர்ஜுய் கத்தியால் குத்தி கொலை

ஈரானின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் தருஷ் மெஹர்ஜுய் மற்றும் அவரது மனைவி வஹிதே முகமதிஃபர் ஆகியோர் சனிக்கிழமை மாலை தெஹ்ரானுக்கு(ஈரான் தலைநகர்) அருகிலுள்ள அவர்களது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

16 Oct 2023

இஸ்ரேல்

காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்ததில் இருந்து வடக்கு காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

15 Oct 2023

சீனா

'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம் 

காசா மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் இராணுவ தாக்குதல், தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.

15 Oct 2023

இஸ்ரேல்

'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு

தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

14 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்

இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ் 

பிரான்ஸ் நாட்டில் நேற்று நடந்த இஸ்லாமிய தாக்குதலில் ஒரு ஆசிரியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, கூடுதலாக 7,000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை 

தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு 

பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் உடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறோம் என்று லெபனானை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

14 Oct 2023

ரஷ்யா

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா

ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்த கூற்றுக்களை நிரூபிக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

14 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர்

காசா பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.

14 Oct 2023

இஸ்ரேல்

வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள் 

சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் பயங்கரவாத குழு டெலிகிராம் சேனலில் பரப்பி வருகிறது.

9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை

இந்தியா நாட்டின் ஜி20 பிரெசிடென்சியின் பரந்த கட்டமைப்பின் கீழ் பாராளுமன்றத்தால் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்; ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகளை மீறியதாகக் கூறி, ரஷ்யா ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வியாழக்கிழமை (அக்டோபர் 12) இடைநீக்கம் செய்துள்ளது.

உயரும் தங்க விலை.. தற்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா? கூடாதா?

உலகில் எந்த ஒரு சர்வதேச பொருளாதார சிக்கல் எழும் போதும், எந்த இரு நாடுகள் போரைத் தொடங்கும் போதும், தங்கம் விலை உயர்வைச் சந்திக்கும். ஆம், பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பிற பொருட்களின் தேவை குறைந்து, அதன் விலைகள் வீழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.

12 Oct 2023

பூமி

இயற்கையே அமைத்துக் கொடுத்த 'டிசெப்ஷன் (எரிமலை) தீவை'ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பூமியில் அண்டார்டிக் பகுதியில் உள்ள 'டிசெப்ஷன் தீவை'ப் (Deception Island) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிக மனித காலாடி படாத இடத்தில் அமைந்திருக்கும் அழகான தீவு. குதிரை லாடத்தின் வடிவில் இருக்கும் இந்தத் தீவின் பறவைப் பார்வைப் புகைப்படமொன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறது நாசா.

11 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி

கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை 

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், பாகிஸ்தானின் சியால்கோட்டில் வைத்து இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான் 

ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ​​ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.

இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், மூத்த இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்க இன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு 

சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

11 Oct 2023

இந்தியா

இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம்

2023ம் ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சிக் கணிப்பை 6.3% ஆக உயர்த்தியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund). முன்னதாக, நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.1%-லிருந்து, 5.9% ஆகக் குறைத்திருந்தது அந்த சர்வதேச அமைப்பு.

10 Oct 2023

இஸ்ரேல்

பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?

2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது,

10 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர்

இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், பழுது பார்க்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் இராணுவமும் உளவுத்துறையும் தோற்றுவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

10 Oct 2023

ஈரான்

இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா?

இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு திட்டமிட உதவியது ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தான் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

10 Oct 2023

கனடா

இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

10 Oct 2023

இஸ்ரேல்

பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது.

09 Oct 2023

மொபைல்

இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்? 

இன்றைய வாழ்க்கை சூழலில் மொபைல் போன் என்பது நமது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

09 Oct 2023

இஸ்ரேல்

காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல் 

ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?

ஹமாஸ் ஏன் அக்டோபர்-6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது என்பதை அறிய 1973ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போர் குறித்து நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

09 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா 

பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

08 Oct 2023

இஸ்ரேல்

வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ்

இஸ்ரேல்: ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்களால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

08 Oct 2023

இஸ்ரேல்

ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?

இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

08 Oct 2023

இஸ்ரேல்

'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.

12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

08 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி 

இஸ்ரேலில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

07 Oct 2023

இஸ்ரேல்

போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?

ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்

மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

07 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை 

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 'போர் நிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.