
இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், மூத்த இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்க இன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், "இஸ்ரேலுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்துகொளவதற்காக" அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார்.
ஆண்டனி பிளிங்கனின் இந்த பயணம் குறித்து பேசிய செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இது ஒற்றுமை மற்றும் ஆதரவை தெரிவிப்பதற்கான பயணம்" என்று கூறியுள்ளார்.
கல்வான்
நாளை பிளிங்கன் இஸ்ரேலை அடைவார்
மேலும், "அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பற்றி இஸ்ரேலின் தலைவர்களிடமிருந்து அவர் கேட்க விரும்புகிறார்... அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் ஆதரவளிக்க முடியும் என்பதையும் பற்றி அவர் நேரடியாகக் கேட்க விரும்புகிறார் ." என்று மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பிளிங்கன் இஸ்ரேலை அடைவார் என்று மில்லர் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்குப் பிறகு பிற நாடுகளுக்கு பிளிங்கன் செல்வாரா என்று கேட்கப்பட்டபோது, அது குறித்த தகவல்கள் இருந்தால் பின்பு வெளியிடப்படும் என்றும் மில்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிகிழமை, பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் வெடித்தது.