
இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜோர்டான் மன்னருடன் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின் போதும், பிரதமர் ட்ரூடோ இந்தியாவுடனான பிரச்சனை குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வரும் சூழ்நிலைக்கு தீர்வு காண கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹுசைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த பிரச்சனை குறித்து விவாதித்திருக்கிறார்.
தபவ்க்ஜ்க
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கனடா கண்டனம்
சட்டத்தின் ஆட்சி மற்றும் இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கைக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தியா குறித்தும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு தலைவர்களுடன் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விவாதத்தின் போது, இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் பெரிய அளவிலான தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை முழுமையாக ஆதரித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் நடந்த அட்டூழியங்களை தனது அரசாங்கம் கவனித்து வருவதாகவும், அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்க, கனடா தனது சர்வதேச பங்காளிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.