இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா?
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு திட்டமிட உதவியது ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தான் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் தாக்குதலைத் திட்டமிட உதவியதுடன், கடந்த திங்கட்கிழமை பெய்ரூட்டில் நடந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டினார்கள் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் முதல் ஹமாஸுடன் இணைந்து வான், நிலம் மற்றும் கடல் வழியாக இஸ்ரேலின் எல்லைகளை ஊடுருவ பயிற்சி எடுத்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிக்கேஜ்
ஈரானுக்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை
1973 ஆம் ஆண்டு நடந்த யோம் கிப்பூர் போருக்குப் பின்னர் இஸ்ரேலின் சக்திவாய்ந்த தடுப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்த மிக முக்கியமான அத்துமீறலாக இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலை நடத்துவதற்கு முன் பெய்ரூட்டில் வைத்து பல கூட்டங்கள் நடைபெற்றது என்றும், ஈரான் அதிகாரிகளுடன், ஹமாஸ் உட்பட நான்கு ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டன என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரானின் பங்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
"ஆனால் நிச்சயமாக அவர்களுக்குள் ஒரு நீண்ட உறவு உள்ளது." என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.