இயற்கையே அமைத்துக் கொடுத்த 'டிசெப்ஷன் (எரிமலை) தீவை'ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
செய்தி முன்னோட்டம்
பூமியில் அண்டார்டிக் பகுதியில் உள்ள 'டிசெப்ஷன் தீவை'ப் (Deception Island) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிக மனித காலாடி படாத இடத்தில் அமைந்திருக்கும் அழகான தீவு. குதிரை லாடத்தின் வடிவில் இருக்கும் இந்தத் தீவின் பறவைப் பார்வைப் புகைப்படமொன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறது நாசா.
தங்களுடைய செயற்கைக்கோள்கள் மூலம் படம்பிடிக்கப்பட்ட, பூமியில் உள்ள அதி அற்புதமான, அழகான இடங்களை 'நாசா எர்த். என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தான் மேற்கூறிய டிசெப்ஷன் தீவின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தது அந்த அமெரிக்க விண்வெளி அமைப்பு.
இது தீவு எனச் சொல்லப்பட்டாலும், உண்மையில் இது ஒரு எரிமலையின் முகத்துவாரமாகும். ஆம், எப்போது வேண்டுமானலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் எரிமலை தான் டிசெப்ஷன் தீவு.
உலகம்
டிசெப்ஷன் தீவில் என்ன ஸ்பெஷல்?
18,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடிமலை வெடிப்பில் இருந்து இந்த தீவு உருவானதாகக் கூறப்படுகிறது. மேலும், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் இந்த எரிமலையானது செயல்பாட்டிலும் இருந்திருக்கிறது.
அன்டார்டிக் பகுதியில் அமைந்திருக்கும் இந்த டிசெப்ஷன் தீவை பல நாடுகள் சொந்தம் கொண்டாடின. ஆனால், தற்போது அன்டார்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் கூட்டு நிர்வாக அமைப்பே தற்போது அந்த தீவை பராமரித்து வருகிறது.
எரிமலையின் முகத்துவாரமாக இருந்தாலும், தற்போது சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்பும் இடமாகவும் இருக்கிறது இந்த டிசெப்ஷன் தீவு. ஆண்டிற்கு 15,000 சுற்றுலாப் பயணிகள் இந்த தீவை சுற்றிப் பார்த்துச் செல்கிறார்களாம்.
நாசா
சுற்றிப் பார்க்க என்ன இருக்கிறது?
மலைக்குன்றுகள், பாறைகள் மற்றும் ஆங்காங்கே பணியால் மூடப்பட்டிருக்கும் இந்தத் தீவானது ஒரு காலத்தில் திமிங்கலங்களை வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் பிரிட்டிஷின் ராணுவ மையமாகவும் திகழ்ந்திருக்கிறது இந்தத் தீவு.
மலையேற்றம், சூடான கடற்குளியல் மற்றும் நிறைய கடற்கரைகளும் இந்தத் தீவில் அமைந்திருக்கின்றன. கப்பல்கள் வந்து செல்வதற்காக இந்தத் தீவின் நடுவே ஃபோஸ்டர் என்ற துறைமுகமும் இருக்கிறது.
இந்தத் தீவானது அன்டாக்டிக் ஒப்பந்தத்தில் சிறப்பு பாதுகாப்பு பகுதியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு அறிய வகை தாவரங்கள் மற்றும் செடிகளுக்கான தாயகமாகவும் இருக்கிறது.
எரிமலைகளைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்தத் தீவில் சில நாடுகள் தங்களுடைய அறிவியல் ஆய்வகங்களையும் அமைத்திருக்கின்றன.