Page Loader
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 
ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதியில் பத்து மீட்புக் குழுக்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 

எழுதியவர் Sindhuja SM
Oct 09, 2023
03:22 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு தொடங்கிய பிறகு, ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதம், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 50,000 பேர் கொல்லப்பட்டனர். கடந்த சனிக்கிழமை, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது என்று பேரிடர் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக் தெரிவித்துள்ளார்.

டபவ்க்

நிவாரண பணிகளுக்கு உதவி தேவைப்படுவதாக அறிவித்த ஆப்கான்

இந்த நிலநடுக்கங்களினால் 9,240 பேர் காயமடைந்துள்ளனர். 1,320 வீடுகள் சேதமடைந்துள்ளன/தரைமட்டமாகியுள்ளன என்றும் சயீக் கூறியுள்ளார். ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதியில் பத்து மீட்புக் குழுக்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தை சமாளிக்க ஹெராட்டில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு வெளியே படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகளுக்கு உணவு, குடிநீர், மருந்து, உடைகள் மற்றும் கூடாரங்கள் தேவைப்படுகின்றன என்று கத்தாரில் உள்ள தாலிபான் அரசு அலுவலகத்தின் தலைவர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் ஒன்றிணைவதற்கு அருகில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன. ஜூன் 2022இல் கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.