
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், பழுது பார்க்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் இராணுவமும் உளவுத்துறையும் தோற்றுவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
மேலும், பாலஸ்தீனத்தை நினைத்து பெருமைப்படுவதாக கூறிய அவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே தொடங்கிய மோதலால் இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போர் ஆரம்பித்ததற்கு பிறகு முதல்முறையாக ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கும் ஈரானின் உச்ச தலைவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சில்க்கின்
'தாக்குதலைத் திட்டமிட்டவர்களின் கைகளை நாங்கள் முத்தமிடுகிறோம்': ஈரானின் உச்ச தலைவர்
மேலும், "சியோனிச ஆட்சி(இஸ்ரேல்) மீதான தாக்குதலைத் திட்டமிட்டவர்களின் கைகளை நாங்கள் முத்தமிடுகிறோம். ஆனால், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானை தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த போரில் ஈரான் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவின் உயர்மட்ட ஜெனரல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குழுவாக கருதப்படும் ஹமாஸ் போராளிகளுக்கு ஈரான் தான் பயிற்சி அளித்து வந்தது என்ற செய்திகளும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், ஈரானுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.