Page Loader
இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம்
இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்தி சர்வதேச நாணய நிதியம்

இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 11, 2023
10:29 am

செய்தி முன்னோட்டம்

2023ம் ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சிக் கணிப்பை 6.3% ஆக உயர்த்தியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund). முன்னதாக, நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.1%-லிருந்து, 5.9% ஆகக் குறைத்திருந்தது அந்த சர்வதேச அமைப்பு. அதேபோல், 2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பையும் 6.8%-லிருந்து, 6.3% ஆகக் குறைந்திருந்தது IMF. தற்போது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் எதிர்பார்த்தை விட அதிக புழக்கம் இருந்ததை சுட்டிக்காட்டி ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை உயர்த்தியிருக்கிறது. மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் அதிக ஜிடிபி வளர்ச்சிக் கொண்ட நாடாகவும் இந்தியா இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.

உலகம்

சீனாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு குறைப்பு: 

இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி 2023ம் ஆண்டுக்கான சீனாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பானது 5.2%-லிருந்து, 5% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தொடர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி குறைவதைச் சுட்டிக்காட்டி ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பைக் குறைத்திருக்கிறது IMF. வளர்ந்த நாடுகளில், அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 0.3% வரை 2.1% ஆக உயர்த்தியிருக்கிறது IMF. ஐரோப்பிய பகுதிகளில் இந்த ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியானது 0.7%-மும், அடுத்த ஆண்டு 1.2% உயரலாம் என கணித்திருக்கிறது IMF. அதேபோல், 2023ம் ஆண்டிற்கான உலகளாவிய ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பானது 3% ஆக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிற்கான கணிப்பை 3.0%-லிருந்து 2.9% ஆகக் குறைத்திருக்கிறது IMF.