பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.
"போர் பிரகடனம் என்று அழைக்கப்படும், பொதுமக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் ஆழ்ந்த துயரத்தை தருகின்றன. அதிகரித்து வரும் இந்த பிரச்சனையில் மனித உயிர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்," என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்(OIC) பிரதிநிதியான மெஹ்தி கூறினார்.
தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை போர் நிலையை அறிவித்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.
டிஜிஸ்ட்
'இரு நாடுகளும் தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும்': ஜமான் மெஹ்தி
இதனையடுத்து, பாலஸ்தீனப் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு பெரும் மோதல்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தியின் கோரிக்கையின் பேரில், "ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்திலும் பிற இடங்களிலும்" ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு UNHRC உறுப்பினர்கள் நேற்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பாலஸ்தீனத்தை ஆதரித்த ஜமான் மெஹ்தி, "சட்டவிரோத வெளிநாட்டு ஆக்கிரமிப்பை இயல்பாக்குவதற்கும் நிரந்தரமாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வன்முறையை வளர்க்கின்றன." என்று கூறினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை தீர்க்க இரு நாடுகளும் தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான பகுதி அவர்களிடம ஒப்படைக்கப்பட வேண்டும் எனபதையும் அவர் குறிப்பிட்டார்.