இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இலங்கை தனது $4.2 பில்லியன் டாலர்கள் கடனை ஈடுகட்ட சீனாவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, கடந்த மே மாதம் தனது அன்னியச் செலாவணி கையிருப்பை முழுவதும் இழந்த நிலையில், கடந்த 7 தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கடன் பிரச்சனையில் சிக்கியது.
இலங்கை அதிகபட்சமாக சீனாவிடமிருந்து மட்டும் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றிருந்தது.
சீனாவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கியுடனான ஒப்பந்தம், வரக்கூடிய வாரங்களில் வரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) மதிப்பாய்வை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவும்.
மேலும் ஐஎம்எஃப் இரண்டாவது தவணையாக வெளியிடும் 334 மில்லியன் டாலர்களை இலங்கை பெற வழிவகுக்கும் என இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்த ஒப்பந்தம், இலங்கை எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியில் விடுபட உதவும்
Sri Lanka and the EXIM bank of China has agreed on key principles to restructure USD 4.2 billion in loans: Finance Ministry #LKA #China #SriLanka pic.twitter.com/69kgio6wkK
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) October 12, 2023