NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?
    இரண்டு வாரங்களுக்கு நீடித்த இந்த போரில் 20,000 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் ஏன் அக்டோபர்-6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது என்பதை அறிய 1973ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போர் குறித்து நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    1973ஆம் ஆண்டு அக்டோபர்-6ஆம் தேதி அன்று யூத மதத்தின் புனித நாளான யோம் கிப்பூர் அனுசரிக்கப்பட்ட போது தான் அரபு நாடுகளின் கூட்டணி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தியது.

    அப்போது ஏற்பட்ட போரை யோம் கிப்பூர் போர் என்று அழைக்கிறார்கள்.

    அந்த திடீர் தாக்குதலுக்கு பிறகு, போர்க் கோடுகள் வரையப்பட்டு, அரபுக் கூட்டணிக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    கோலன் ஹைட்ஸ், சினாய் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பிற பகுதிகளில் இந்த சண்டைகள் நடந்தன.

    எவ்ஜன்க்

    50 ஆண்டுகளுக்கு பின் அதே தேதியில் போரை தொடங்கிய பாலஸ்தீனம் 

    அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அணுசக்தி எச்சரிக்கையை வெளியிட்டபோது உலகளவில் பெரும் பதட்டம் நிலவியது.

    அதன் பின் போர் தீவிரமடைந்ததால், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின்OPEC) அரபு உறுப்பினர்கள் இஸ்ரேலை ஆதரிக்கும் அனைத்து மேற்கத்திய நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தினர்.

    இரண்டு வாரங்களுக்கு நீடித்த இந்த போரில் 20,000 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இறுதியில், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட அதிக நிலப்பரப்பை கைப்பற்றிய இஸ்ரேல், அந்த போரில் வெற்றி பெற்றது.

    அந்த போர் ஆரம்பித்து சரியாக 50 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் 6ஆம் தேதி, 5000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்திய பலஸ்தீனப் போராளிகள், அதே தேதியில் அடுத்த ஒரு போரை தொடங்கியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  பயங்கரவாதம்

    உலகம்

    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  பாகிஸ்தான்
    உலக நதிகள் தினம்: நதிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? சுற்றுச்சூழல்
    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை  கனடா
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025