
சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாட்டின் ஆயுதக்குழுவான ஹமாஸ் படையினர் இடையே கடந்த 7ம்தேதி முதல் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
ஹமாஸ் படையினர் இஸ்ரேலின் தெற்கு திசையில் தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.
தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், சீனாவில், இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி உலகம் முழுவதுமான கவனத்தினை ஈர்த்துள்ளது.
சீனா நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கத்தி
இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தல்
தாக்கப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஹமாஸ் இன்று(அக்.,13) 'கோபத்தின் நாள்'-க்கு அழைப்பு விடுத்த காரணத்தினால் உலகம் முழுவதுமுள்ள இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்த அறிக்கையினை மேற்கோள்காட்டி 'தூதரக வளாகத்தின் மீது எவ்வித தாக்குதல் மேற்கொள்ளவில்லை. இது அமெரிக்கா தூதரகம் மற்றும் அனைத்து தூதரங்கள் அமைந்துள்ள, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட ஓர் பகுதியில், நடைபெற்ற தாக்குதல் ஆகும்' என்று கூறியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்து வருவது கவலையளிக்கிறது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறிய நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.