12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஹெராட் மாகாணத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஹெராட்டில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
ஃபரா மற்றும் பத்கிஸ் மாகாணங்களில் உள்ள சில வீடுகளும் அழிந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்கானிஸ்தானை நேற்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
டவ்ஜன்
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள்
இந்த நிலநடுக்கம் ஹெராட் நகரத்தில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அருகில் உள்ள ஃபரா மற்றும் பட்கிஸ் மாகாணங்களிலும் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் ஒன்றிணைவதற்கு அருகில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
ஜூன் 2022இல் கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.