Page Loader
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்
இந்த போரில் இதுவரை 3,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்

எழுதியவர் Sindhuja SM
Oct 14, 2023
05:37 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி, நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர். இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த மாபெரும் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ்-நுக்பா படையின் நிறுவனத் தளபதி அலி காடி இன்று கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "கடந்த வார இறுதியில் காசா பகுதிக்கு அருகே இஸ்ரேலியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் 'நுக்பா' கமாண்டோ படையின் நிறுவனத் தளபதி அலி காடி கொல்லப்பட்டார்." என்று இஸ்ரேலிய விமானப்படை(IAF) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தக்ஜவாஸ்

"அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இதே கதிதான்": இஸ்ரேல் 

"2005 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடிமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அலி கைது செய்யப்பட்டார். அதன் பின், கிலாட் ஷாலிட் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் விடுவிக்கப்பட்டார்" என்று IAF மேலும் கூறியுள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF), "அலி காடி இஸ்ரேலில் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான அக்டோபர் 7 படுகொலைக்கு தலைமை தாங்கினார். நாங்கள் அவரை அழித்துவிட்டோம். அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இதே கதிதான்." என்று ட்விட்டரில் கூறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 3,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.