NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?
    1947இல், ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை இரு நாடுகளாக பிரிக்க வாக்களித்தது.

    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 07, 2023
    06:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

    இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் இன்று அதிகாலை நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 'போர் நிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    5000 ராக்கெட்டுகளை வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 500 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் குடிமக்களே! நாம் போரில் இருக்கிறோம். இது ஒரு மோதல் அல்ல, நடவடிக்கையும் அல்ல -இது போர்! நாம் இதில் வெற்றி பெறுவோம்." என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான பிரச்சனையின் வரலாறு குறித்து இப்போது பார்க்கலாம்.

    த்வஜன்ஸ்ட்டிக்

    பிரிட்டன் ஆட்சியில் தொடங்கிய பிரிவினைகள் 

    முதலாம் உலகப் போரில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, யூத சிறுபான்மையினரும், அரேபிய பெரும்பான்மையினரும் வாழ்ந்த பாலஸ்தீனத்தை பிரிட்டன் கைப்பற்றியது.

    அதன் பிறகு, பாலஸ்தீனத்தை யூதர்களின் தாயகமாக உருவாக்குவதற்கு சர்வதேச சமூகமும் பிரிட்டனும் முயற்சித்தது. இதனால், யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு இடையே பதட்டம் அதிகரித்தது.

    1920கள் மற்றும் 1940களில், பல யூதர்கள் ஐரோப்பாவில் துன்புறுத்தப்பட்டதால், அதில் இருந்து தப்பிக்க அவர்கள் ஐரோப்பாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு குடி பெயர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து, யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான உரசலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பும் தீவிரமடைந்தன.

    1947இல், ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை இரு நாடுகளாக பிரிக்க வாக்களித்தது.

    ட்ஜ்கவ்

    பாலஸ்தீனியர்களுக்கு நேர்ந்த அவலம் 

    இந்த திட்டத்தை யூத தலைமை ஏற்றுக்கொண்டது. ஆனால் அரபு தரப்பு அதை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. அதனால், அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

    1948இல், இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல், பிரிட்டிஷ் அதிகாரிகள் பின்வாங்கிவிட்டனர்.

    அதன் பின், யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை நிறுவினர்.

    பல பாலஸ்தீனியர்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள். அதனால் அப்போது போர் வெடித்தது.

    அண்டை நாடுகளான அரபு நாடுகள் ராணுவ பலத்துடன் இந்த போரில் தலையிட்டன.

    அப்போது நூறாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    அதில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக புகுந்தனர்.

    தற்போது, பெரும்பாலான பாலஸ்தீனிய அகதிகள் மற்றும் அவர்களது சந்ததியினர் காசா, மேற்குக் கரை, கிழக்கு ஜோர்டான்,சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.

    லக்ட்வ்க்ன்

    பாலஸ்தீனியர்கள் எதற்காக போராடி வருகின்றனர்?

    1987ஆம் ஆண்டில், ஹரகாத் அல்-முகவாமா அல்-இஸ்லாமியா(இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்) என்ற இராணுவத் திறன் கொண்ட ஒரு அரசியல் குழு, பாலஸ்தீனிய மதகுரு ஷேக் அகமது யாசினால் தொடங்கப்பட்டது. இது சுருக்கமாக ஹமாஸ் என்று அழைக்கபடுகிறது.

    பாலஸ்தீனியர்களின் தனி நாட்டிற்காக போராடும் ஒரு முக்கிய குழு இதுவாகும்.

    இந்த குழு காசா என்ற பகுதியை கைக்குள் வைத்திருக்கிறது.

    இஸ்ரேலை ஒப்பிடும் போது காசா என்பது மிக சிறிய பகுதியாகும்.

    பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் ஒரு பகுதியாக இருக்கும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை கோரி போராடி வருகின்றனர்.

    ஆனால், பாலஸ்தீனியர்களை அவர்களுக்கு சொந்தமான வீடுகளுக்குத் திரும்ப அனுமதித்தால் அது யூத நாடான தங்களது நாட்டை அச்சுறுத்தும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

    ட்னவ்க்க்ள்

    நிலத்தை பிரிப்பதில் உள்ள சிக்கல்கள் 

    காசா பகுதியை பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் பாலஸ்தீனியர்களின் 'ஹமாஸ்' ஆட்சி செய்கிறது.

    காசாவின் எல்லைகள் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    மேற்குக் கரை என்னும் பகுதி இன்னும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்குக் கரை, தங்களுக்கு சொந்தமானது என்று பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர்.

    காசா, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையே பதற்றம் தற்போது வரை நிலவி வருகிறது.

    ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகராக இஸ்ரேல் கோருகிறது. பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமை எதிர்கால பாலஸ்தீனிய அரசின் தலைநகர் என்று கூறுகின்றனர்.

    இதனால், அந்த நாட்டை பிரிப்பதில் பல பிரச்சனைகள் உள்ளன.

    இந்நிலையில், தங்களுக்கான நாட்டை கோரி பாலஸ்தீனியர்கள் தற்போது ஒரு பெரும் போரை தொடங்கியுள்ளனர்.

    சிஜிக்பபைஜ்வ்

    இஸ்ரேல்-பாலஸ்தீனம்: தற்போதைய நிலை 

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் இணையுமாறு மேற்குக்கரை, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள தனது போராளிகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நோக்கத்தோடு, இஸ்ரேலும் எகிப்தும் காசா பகுதியின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    இதனால், காசாவில் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் பலர் உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற போராடுகிறார்கள்.

    காசா முற்றுகை, மேற்குக்கரை தடுப்புச்சுவர், பாலஸ்தீன வீடுகளை அழித்தல் போன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக காசா மற்றும் மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.

    பாலஸ்தீன வன்முறையில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாப்பதற்காகவே தாங்கள் செயல்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    உலகம்
    உலக செய்திகள்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  பயங்கரவாதம்

    உலகம்

    கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை இந்தியா
    'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான்
    ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு அமெரிக்கா
    நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா  கனடா

    உலக செய்திகள்

    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து கனடா
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  உலகம்
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா
    வீடியோ: போர்ச்சுகல் தெருக்களில் ஆறாக ஓடிய 2.2 மில்லியன் லிட்டர் ஒயின்  போர்ச்சுகல்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025