
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை
செய்தி முன்னோட்டம்
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவுத்துறை இரண்டு அறிக்கைகளை தயாரித்திருந்தது.
முதல் அறிக்கை செப்டம்பர் 28ஆம் தேதி அன்று தயாரித்ததாகும். ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவக்கூடும் என்று இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அறிக்கை அக்டோபர் 5 தேதி அன்று தயாரித்ததாகும். இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜ்னவ்ல்
உளவுத்துறை விடுத்த மிக தீவிரமான எச்சரிக்கை
இவை வழக்கமான உளவுத்துறை அறிக்கைகளாகும். ஆண்டு முழுவதும் இதே போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதால் இவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நிர்வாகத்திற்கு உளவுத்துறை விடுத்த மிக தீவிரமான எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த சனிக்கிழமை, நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசித் தாக்கி, குறைந்தது 600 குழந்தைகள் உட்பட 1,900 பேரைக் கொன்றது.
இதனையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.