Page Loader
இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2023
04:17 pm

செய்தி முன்னோட்டம்

கார் உற்பத்தி நிறுவனமான கியா இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. கொரியாவில் நடந்த எலக்ட்ரிக் வாகன நாள் நிகழ்வின் போது நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவனத்தின் உயர் அதிகாரி, வரவிருக்கும் தொழிற்சாலையானது உள்நாட்டில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், உலகளவில் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான உற்பத்தி மையமாகவும் இது செயல்படும் என்று கூறினார். நிறுவனம் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, உலகம் முழுவதும் மொத்தம் எட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் இதுவரை திட்டமிடப்பட்டுள்ளன. தென்கொரியா முக்கிய மையமாக செயல்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மின்சார வாகனங்கள் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும். அதே சமயம் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் நடுத்தர மற்றும் பெரிய பிரிவை சீனா பூர்த்தி செய்யும்.

Kia to open EV manufacturing facility in India

இந்தியாவில் பிரத்யேக கியா எலக்ட்ரிக் வாகன ஷோரூம்

இந்தியாவில் விரைவில் பரந்த அளவிலான எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக ஷோரூம்களை உருவாக்க உள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்யுவி மற்றும் செடான் உள்பட மூன்று புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களையும் கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இவி 9 என்ற பெயரில் புதிய மாடல் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், கியா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகன கார் பயன்பாட்டை உயர்மட்ட நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, நிறுவனம் இந்த பிரிவில் 30,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.