வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ்
இஸ்ரேல்: ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்களால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னனிலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா நஃப்தலி என்ற இஸ்ரேல் செய்தியாளர் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில்(ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். ஹமாஸ் நேற்று நடத்திய பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 100 பொதுமக்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது. ஒரு தம்பதியினர் தங்கள் மகன் மற்றும் மகளுடன் தரையில் அமர்ந்திருப்பதைக் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் காணலாம்.
வைரலாகும் வீடியோவில் என்ன நடக்கிறது?
புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில் அந்த குடும்பத்தினர் என்ன பேசுகிறார்கள் என்பதன் மொழிபெயர்ப்பை இப்போது பார்க்கலாம். "ஏன் அப்பா உன் கையில ரத்தம் வருது?" என்று அந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் கேட்டுவிட்டு கதறி அழுகிறான். "அவள் உயிருடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவள் திரும்பி வரமாட்டாளா? அதற்கு வாய்ப்பே இல்லையா" என்று அதில் இருக்கும் அதிர்ச்சியடைந்த சிறுமி கூறுகிறாள். அவள் தன் கண்களுக்கு முன் தூக்கிலிடப்பட்ட தனது சகோதரி குறித்து பேசுவதாக கூறப்படுகிறது. "என் சகோதரி இறந்துவிட்டாள்," என்று அந்த சிறுமி அதற்கு பின் கூறுவிட்டு அழுகிறாள். அதற்கு அவளது தாய் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று அந்த சிறுமியை சமாதானப்படுத்துகிறார்.