இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர்
காசா பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது. ஹமாஸின் வான்வழிப் படைகளின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஹமாஸின் வான்வழி வரிசையின் தலைவரான முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது. அபு முராத், பயங்கரவாதிகளை இயக்குவதில் பெரும் பங்கு வகித்தார் என்றும், கடந்த வாரம் ஹேங் கிளைடர்களில் வான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த தாக்குதல்காரர்களுக்கும் அவர் தான் உதவினார் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. காசா பகுதி மீது நடத்தபட்ட தாக்குதலில், இஸ்ரேல் ஊடுருவலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸின் கமாண்டோ படைகளுக்கு சொந்தமான டஜன் கணக்கான தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.