உலகம்: செய்தி
இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்
இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத ஒரு பெரிய வெடிகுண்டு, தென்மேற்கு போலந்தில் உள்ள வ்ரோக்லா நகரின் ரயில்வே மேம்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதால், 2,500 குடியிருப்பாளர்கள் இன்று(மே 26) வெளியேற்றப்பட்டனர்.
AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா!
கனடாவைச் சேர்ந்த தனியுரிமை ஒழுங்குமுறை ஆணையங்கள் சேர்ந்து சாட்ஜிபிடியின் தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது.
பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி
ஈரான் இன்று(மே 25) 2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹைதராபாத்தில் புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.
ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்
ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.
பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.
இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட "கொடிய" தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.
பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸைக் கரம் பிடிக்கும் லாரென் சான்செஸ்.. யார் இவர்?
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் மற்றும் அவரது காதலரான லாரென் சான்செஸ் ஆகிய நிச்சயம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி
பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 16-ஆம் தேதி துவங்கிய, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்து வருகிறார்கள்.
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ!
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்களை காணலாம். இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.
பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிஜி மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி
இன்று(மே 22) பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.
பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
பப்புவா நியூ கினியா நாட்டு மக்களிடம் இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு செல்வதற்காக, டோக் பிசின் மொழியில் 'திருக்குறளை' பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு
போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!
உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான்.
மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!
மியான்மரில் மோக்கா புயலால் 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முதல் இங்கிலாந்து நாடுகள் வரை தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி!
சீனாவுக்குச் சொந்தமான குறும்பட வீடியோ செயலியான TikTokஐ தடை செய்த முதல் நாடாக அமெரிக்காவின் மொன்டானா மாறியுள்ளது.
உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை!
நோவக் ஜோகோவிச் 2023 இத்தாலிய ஓபன் தொடரில் காலிறுதியில் ஹோல்கர் ரூனிடம் 2-6, 6-4 மற்றும் 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியதைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 ஆக இருக்கும்போது அதிக தோல்வியை பெற்ற வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.
சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!
இந்தியாவில் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்று கேட்டால், ஒரு சிலரின் பெயரை உடனே சொல்லிவிட முடியும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா
பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா?
அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை
இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்?
உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்திலிருந்து 11,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது வோடஃபோன். அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக மார்கரிட்டா டெல்லா வல்லே பதவியேற்ற சில மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்
ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தைவான் பாராளுமன்றம் இன்று(மே 16) நிறைவேற்றியது.
அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்
அமெரிக்க அதிகாரிகள், "ஜாம்பி மருந்து"என்ற போதைப்பொருள் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ்
அமெரிக்காவில் உள்ள பலரிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் தங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார் என்று கேட்கப்பட்டது.
இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது.
இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்
சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பித்து ஒரு மாதமாகியும், இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.