இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை
இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த சீன படகு மூழ்கியதாக செய்தி நிறுவனம் சிசிடிவி தெரிவித்துள்ளது. அந்த படகில் சீனாவைச் சேர்ந்த 17 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது. சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள சீன இராஜதந்திரிகளுக்கும், விவசாயம் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களுக்கும் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளனர். லுபெங்லையுவான்யு எண்-8 என்று பெயரிடப்பட்ட அந்த படகு, கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மீட்புப் பணி துவங்கியது
Fishing boat with 39 people on board capsizes in the Indian Ocean, including 17 from China, 17 from Indonesia and 5 from the Philippines. No survivors found so far— BNO News (@BNONews) May 17, 2023