Page Loader
ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது 
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு இரண்டு வார ஜாமீன் வழங்கியது.

ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது 

எழுதியவர் Sindhuja SM
May 15, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் அறங்காவலர்களாக உள்ள அல் காதிர் பல்கலைக்கழகத்தை அமைக்கும் போது, நில மேம்பாட்டாளரிடம் இருந்து நிதி உதவி பெற்றதாக அவர்கள் இருவரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, இம்ரான் கான் கடந்த வாரம் பாகிஸ்தான் ஊழல் எதிர்ப்பு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டார். இதனால், நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் நீதிமன்ற தலையீட்டின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.

details

புஷ்ரா பேகத்தை சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்த திட்டமிடுகிறார்கள்: இம்ரான் கான் 

அதன் பிறகு இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு இரண்டு வார ஜாமீன் வழங்கியது. "அல் காதர் அறக்கட்டளை வழக்கில் புஷ்ரா பீபிக்கு பாதுகாப்பு ஜாமீன் வழங்குமாறு நாங்கள் கோரியிருந்தோம். LHCயின் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மே 23 வரை ஜாமீன் வழங்கியுள்ளது" என்று பீபியின் வழக்கறிஞர் இன்டிசார் ஹுசைன் பஞ்சுதா தெரிவித்துள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்திற்கு தனது மனைவியுடன் சென்ற இம்ரான் கான், தனக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தனது மனைவியைக் கைது செய்ய அரசாங்கம் திட்டமிடுகிறது என்று அச்சம் தெரிவித்திருந்தார். "புஷ்ரா பேகத்தை சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்த இப்போது திட்டம் தீட்டுகிறார்கள்." என்று அவர் ட்விட்டரில் கூறி இருந்தார்.