
அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸைக் கரம் பிடிக்கும் லாரென் சான்செஸ்.. யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் மற்றும் அவரது காதலரான லாரென் சான்செஸ் ஆகிய நிச்சயம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தங்கள் இருவருக்குமிடையேயான உறவை 2019-ல் வெளியுலகத்திற்கு அறிவித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.
தன்னுடைய முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட்டுடனான விவாகரத்து இறுதியான பிறகு, லாரெனுடனான தன்னுடைய உறவை வெளியுலகத்திற்கு அறிவித்திார் ஜெஃப் பெஸாஸ்.
தற்போது பெஸாஸும், லாரெனும் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் பங்கேற்றிருக்கின்றனர்.
ஜெஃப் பெஸாஸிடம் இருந்து விவாகரத்துத் தீர்வாக 38 பில்லியன் டாலர்களைப் பெற்றிருக்கிறார் மெக்கென்ஸி ஸ்காட். அதில் பாதியை தொண்டுக்காக அளிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெஃப் பெஸாஸ்
லாரென் சான்செஸ் யார்?
53 வயதாகும் லாரென் சான்செஸ் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர், 2016-ல் பிளாக் ஆப்ஸ் ஏவியேஷன் என்ற தன்னுடைய சொந்த நிறுவனத்தை துவக்கியிருக்கிறார்.
பெஸாஸூக்கு முன்னார் ஹாலிவுட் ஏஜென்ட் பேட்ரிக் வைட்செல்லுடன் திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2018-ம் ஆண்டில் இருந்து பெஸாஸூடன் உறவில் இருந்து வருகிறார் லாரென் சான்செஸ்.
பெஸாஸின் வழியைப் பின்பற்றி தானும் விண்வெளிக்குச் செல்ல விரும்புவதாக கடந்த நவம்பர் மாதம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் லாரென். காலநிலை மாற்றத்தை தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட Bezoa Earth Fund அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார் லாரென்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Amazon founder Jeff Bezos engaged to girlfriend Lauren Sanchez: Report
— ANI Digital (@ani_digital) May 22, 2023
Read @ANI Story | https://t.co/8dlbASBezj#JeffBezos #LaurenSanchez #Amazon pic.twitter.com/CJvq1P2HHA