Page Loader
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதும் உள்ள சில விசித்திர அருங்காட்சியகங்கள்

சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 18, 2023
09:21 am

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம். அந்த இடத்திற்கு பெயர்தான் அருங்காட்சியகம். பாரிஸில் உள்ள லூவ்ரே முதல் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வரை உலகெங்கிலும் உள்ள நன்கு அறியப்பட்ட அருங்காட்சியகங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கூடும். ஆனால் சில வித்தியாசமான அருங்காட்சியகங்களும் உள்ளது. அது உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இந்த சர்வதேச அருங்காட்சியக தினத்தில் உலகில் உள்ள சில விசித்திரமான அருங்காட்சியகங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கப்- நூடுல்ஸ் அருங்காட்சியகம், ஜப்பான்: கப் நூடுல்ஸ் முதன்முதலில் தோன்றிய இடமான ஒசாகா நகரில், கப் நூடுல்ஸ் பற்றிய முழுமையான புரிதலை வழங்குவதற்காகவே, ஒரு சுவாரஸ்யமான அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

card 2

விசித்திர அருங்காட்சியகங்கள் 

ஸ்பை அருங்காட்சியகம், அமெரிக்கா: ஸ்பை என்றழைக்கப்படும் உளவு அருங்காட்சியகத்தில், உளவுத்துறை மற்றும் உளவு பற்றிய நுண்ணறிவைப் பெறலாம். உலகின் பாதுகாப்பிற்காக உளவுத்துறை ஆற்றிய பங்கை பற்றியும், அதன் பயன்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக உளவாளிகள் பயன்படுத்திய வித்தியாசமான கேட்ஜெட்டுகள் மற்றும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Under-Water அருங்காட்சியகம், மெக்சிகோ: பார்வையாளர்கள் கண்ணாடிப் படகுகள், ஸ்கூபா டைவிங் அல்லது ஸ்நோர்கெலிங் மூலம் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்கலாம். அங்கு, 500 க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் சிற்பங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. மாந்திரீகம் மற்றும் மேஜிக் அருங்காட்சியகம், இங்கிலாந்து: இந்த அருங்காட்சியத்தில், மாந்திரீகத்தின் வரலாறு மற்றும் அது சார்ந்த பொருட்கள், நூல்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.