Page Loader
பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது 
இந்த விருதை பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கியுள்ளார்.

பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது 

எழுதியவர் Sindhuja SM
May 22, 2023
12:10 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிஜி மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பப்புவா நியூ கினியா சென்றிருந்த ​​பிரதமர் மோடிக்கு, இன்று அந்த தீவு நாடுகளின் உயரிய சிவிலியன் விருதுகள் வழங்கப்பட்டன. உலகளாவிய தலைமைத்துவத்திற்காக, பிரதமர் மோடிக்கு "தி கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி" விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கியுள்ளார். பிஜியன் அல்லாதவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது மிக அரிதான ஒரு விஷயமாகும்.

details

பிஜியன் அல்லாத ஒரு சிலரே இன்றுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர்

"இந்தியாவுக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு பிஜியின் பிரதமரால் பிஜியின் உயரிய கவுரவம் வழங்கப்பட்டது: அவரது உலகளாவிய தலைமையை அங்கீகரிக்கும் வகையில் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி என்ற விருதை வழங்கியுள்ளனர். பிஜியன் அல்லாத ஒரு சிலரே இன்றுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர். " என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான மற்றும் நீடித்த உறவில் முக்கியப் பங்காற்றிய பிஜி-இந்திய சமூகத்தின் தலைமுறையினருக்கும், இந்திய மக்களுக்கும் பிரதமர் மோடி இந்த மரியாதையை அர்ப்பணித்தார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.