Page Loader
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ! 
பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள்

உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ! 

எழுதியவர் Arul Jothe
May 22, 2023
12:41 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்களை காணலாம். இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும். வியட்நாமின் குவாங் நின் மாகாணத்தில் உள்ள மிக அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளில் ஒன்றான ஹாலோங் விரிகுடா: இயற்கை அழகு & நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளுக்கு பிரபலமானவை. இந்த நிகழ்வை இரவு நேரத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும். ஜப்பானில் ஹோன்ஷுவின் ஹொகுரிகு பகுதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள டோயாமா கடற்கரையானது, 'பயோலுமினசென்ட் ஃபயர்ஃபிளை ஸ்க்விட்' எனப்படும், கணவாய் மீன்களால் ஏற்படும் ஒளிக்காக அறியப்படுகிறது. ஜப்பானில் ஒரு சுவையான உணவாகக் கருதப்படும் இந்த ஸ்க்விட்கள் மூன்று இன்ச் நீளம் இருக்கும்.

Bio luminiscent Beaches

நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகள்

தாய்லாந்தின் டன் சாய் கடற்கரையில், பயோலுமினென்சென்ட் நிகழ்வு, நுண்ணிய தாவரங்களை கொண்ட பிளாங்க்டனால் ஏற்படுகிறது. பகலில் தெளிவான நீரை கொண்ட இந்த கடற்கரையில், பாறை ஏறுதல் போன்ற சாகசங்களிலும் ஈடுபடலாம். புவேர்ட்டோ ரிக்கோவில் அமைந்துள்ள மஸ்கிட்டோ விரிகுடா, 2008 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தத்தில், 'உலகின் பிரகாசமான பயோலுமினசென்ட் கடற்கரை'களில் ஒன்றாக இடம் பிடித்தது. இங்கு, நீரில் இருக்கும் நுண்ணிய உயிரினங்கள் அந்தப் பகுதியை நீல நிறமாகவும், பிரகாசமாகவும் ஆக்குகின்றன. மாலத்தீவில் அதிகம் பார்வையிடப்பட்ட ஒளிரும் கடற்கரைகளில் ஒன்றான, ரீத்தி பீச், உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். மாலத்தீவில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கி, பல கடல் விளையாட்டுகளில் ஈடுபடலாம். நீங்கள் இங்கே கண்கவர வைக்கும் சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கலாம்.