NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி
    இந்த ஏவுகணைக்கு கெய்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது

    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் இன்று(மே 25) 2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது என்று ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேலின் ஆயுதப் படைகளின் தலைவர் இரண்டு நாட்களுக்கு முன் கூறி இருந்த நிலையில், ஈரான் இன்று ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய ஏவுகணை திட்டத்தை கொண்டுள்ள ஈரான், தனது ஆயுதங்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை அடையும் திறன் கொண்டவை என்று கூறி இருக்கிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ஈரான் தனது "தற்காப்பு" ஏவுகணை திட்டத்தை மேலும் மேம்படுத்த இருப்பதாக கூறியுள்ளது.

    details

    எங்கள் நாட்டையும் அதன் சாதனைகளையும் நாங்கள் பாதுகாப்போம்: ஈரான் அரசு 

    "ஈரானின் எதிரிகளுக்கு நாங்கள் கூறும் செய்தி என்னவென்றால், எங்கள் நாட்டையும் அதன் சாதனைகளையும் நாங்கள் பாதுகாப்போம். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம் என்பதே எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் கூறும் செய்தியாகும்" என்று ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் முகமதுரேசா அஷ்டியானி கூறினார்.

    1,500 கிலோ போர்க்கப்பலைச் சுமந்து கொண்டு, 2,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய ஈரானின் கோரம்ஷாஹர் 4 பாலிஸ்டிக் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் காட்சிகளை ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

    இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் முஸ்லீம் போர்வீரர்களால் கைப்பற்றப்பட்ட யூத கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் இந்த ஏவுகணைக்கு கெய்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது என ஈரான் அரசு செய்தி நிறுவனமான IRNA கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    ஈரான்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    உலகம்

    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உடல் நலம்
    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் பாகிஸ்தான்
    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  பாகிஸ்தான்
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது உலகம்
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025