மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!
செய்தி முன்னோட்டம்
மியான்மரில் மோக்கா புயலால் 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள் ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மியான்மர் மற்றும் பங்களாதேஷில் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
இதன் விளைவாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
சாலைகள் மற்றும் கிராமங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ராக்கைன் மாநிலத்தில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
Myanmar
மியான்மரில் மோக்கா புயல்
இலட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
மியான்மரில் உள்ள ரோஹிங்கியாக்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை, அவர்கள் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளாக கருதப்படுவதால், சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான அவசரகால மீட்பு பணியாளர்கள் ரக்கைனுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் கடற்படை மற்றும் விமானப்படை பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
மியான்மரில் உள்ள சிட்வே விமான நிலையம் வழக்கமான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது என்று குளோபல் நியூ லைட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் உட்பட சர்வதேச உதவிக் குழுக்கள் தற்போது சிட்வே மைதானத்தில் இயங்கி வருகின்றன.