Page Loader
அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ்

அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ்

எழுதியவர் Arul Jothe
May 16, 2023
12:29 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் உள்ள பலரிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் தங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார் என்று கேட்கப்பட்டது. இங்கிலாந்து அரச குடும்பம் பற்றிய எந்த தகவல் வந்தாலும் பரபரப்பாக பேசப்படும். சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், தங்களுக்குப் பிடித்தவர் யார் என்று மக்களிடம் கேட்கப்பட்டது. இங்கிலாந்தில் இளவரசராக இருந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் ஹாரி மற்றவர்களை விட மிகவும் பிரபலமாக இருக்கிறார். இளவரசர் ஹாரிக்கு 33.8% வாக்குகள் கிடைத்தன. அடுத்த இடத்தில், கேட் மிடில்டன் 29.6% வாக்குகள் பெற்றுள்ளார். இளவரசர் வில்லியமும் அதிகமாக விரும்பப்பட்டார், ஆனால் இளவரசர் ஹாரியை விட செல்வாக்கு குறைவு தான்.

America 

5வது இடத்தில் மன்னர் சார்லஸ்

சர்வேயில் கலந்து கொண்ட சிறிய சதவீதத்தினர், இளவரசி பீட்ரைஸ் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பினர். ஒரு சிலர் இளவரசி யூஜெனி மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோரையும் விரும்பினர். கிங் சார்லஸ் இந்த சர்வேயில் முன்னணியில் இடம் பெறவில்லை. 10.8% வாக்குகளுடன் ஐந்தாவது இடத்தைப்பெற்றுள்ளார். இளவரசி அன்னே, 5.7% வாக்குகளுடன் ஆறாவது இடத்தையும், மன்னரின் மனைவி கமிலா 4.4% வாக்குகளைப்பெற்று ஏழாவது இடத்தையும் பிடித்தார். அரசர் பரம்பரைக்கு சொந்தமான பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் உள்ளது.