
உலகின் நெ.1 வீரராக இருந்துகொண்டு அதிக தோல்வி! நோவக் ஜோகோவிச்சின் மோசமான சாதனை!
செய்தி முன்னோட்டம்
நோவக் ஜோகோவிச் 2023 இத்தாலிய ஓபன் தொடரில் காலிறுதியில் ஹோல்கர் ரூனிடம் 2-6, 6-4 மற்றும் 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியதைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 ஆக இருக்கும்போது அதிக தோல்வியை பெற்ற வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
ஏடிபி தரவரிசையில் உலக நம்பர் 1 வீரராக இருக்கும் நோவக் ஜோகோவிச்சின் 70வது தோல்வி இதுவாகும்.
இதன் மூலம் 14 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பீட் சாம்ப்ராஸ் பெற்ற 69 தோல்விகளை விஞ்சி மோசமான சாதனை படைத்துள்ளார்.
இதற்கிடையே, 2004க்கு பிறகு முதல்முறையாக ஜோகோவிச் மற்றும் நடால் ஆகிய இருவரில் ஒருவர் கூட இறுதிப்போட்டியில் பங்கேற்காத முதல் இத்தாலிய ஓபனாக இது அமைந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
One of the most extraordinary sporting streaks comes to an end...
— Tennis TV (@TennisTV) May 17, 2023
Neither Novak Djokovic nor Rafael Nadal will be in the @InteBNLdItalia final for the first time since 2004 🤯#IBI23 pic.twitter.com/HzZrWKwXDh