இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நேற்று அவையில் உரையாற்றியபோது, பாராளுமன்றம் அதன் கோட்டையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், PTI தலைவர் இம்ரான் கானுக்கு நீதித்துறையின் ஒரு பிரிவினர் முன்னெப்போதும் இல்லாத சலுகைகளை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் தனது உரையின் போது, நாட்டில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் வன்முறைச் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் ஹவுஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அரசின் எதிரிகள் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் Vs பாகிஸ்தான் அரசாங்கம்
இந்த கேவலமான செயல்களுக்கு PTIஇன் பயிற்சி பெற்ற படைகளே காரணம் என்று ரியாஸ் குற்றம் சாட்டினார். மேலும், பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுடன் முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். முத்தாஹிதா குவாமி இயக்கத்தின்(MQM) சலாவுதீன், சமீபத்திய வன்முறைச் செயல்கள் சகிக்க முடியாதவை என்றார். பொது மற்றும் தனியார் சொத்துக்களை சூறையாடிய PTI தலைவர் இம்ரான் கானுக்கு நீதித்துறை "சலுகைகளை" வழங்குகிறது என்று அவர் கூறினார். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின்(SCP) உயர்மட்ட நீதிபதிகளுக்கும், ஆளும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின்(PDM) அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.