இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்
செய்தி முன்னோட்டம்
சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பித்து ஒரு மாதமாகியும், இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
சூடான் தலைநகர் கார்டூமில் எப்போதும் சண்டையும் குண்டுவெடிப்பு நடந்து கொண்டே இருப்பதால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.
கார்டூமில் வசிப்பவர்கள் பல வாரங்களாக உணவு மற்றும் அடிப்படைப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், மின் தடைகள், தகவல் தொடர்புத் தடைகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் அவர்களது வாழ்வு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஐந்து மில்லியன் மக்கள் வாழ்ந்து வரும் கார்டூம், தற்போது மயான பூமியாக மாறியுள்ளது.
DETAILS
குடுவெடிப்புகளும் புகை மூட்டங்களும் அதிகரித்து வருகிறது
அங்குள்ள விமான நிலைய டார்மாக்கில் விமானங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன.
போர் பதட்டம் அதிகரித்ததால், வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
சூடானில் உள்ள மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் கடைகள் சூறையாடபடுவது வழக்கமாகி கொண்டிருக்கிறது.
மேற்கு டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரான எல் ஜெனினாவிலும் வன்முறைகள் தொடங்கியுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு, சுகாதார அமைப்பு "மொத்த சரிவில்" உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூடானில் இன்று காலை வரை சண்டையின் தீவிரம் ஓயவில்லை. குடுவெடிப்புகளும் புகை மூட்டங்களும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை பலநூறு பேர் உயிரிழந்துள்ளனர்.