உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா? அது மட்டுமல்ல, இதுதான் உலகிலேயே மிகச்சிறிய நாடு. கண்டுபிடித்து விட்டீர்களா? ஆம், கிறிஸ்தவர்களின் புனித நகரான வாடிகன் தான் அது. இந்த நகருக்கு சுற்றுலா செல்வதென்றால், இரண்டே மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சிறியது! வாடிகன் நகரத்தை பற்றி மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்: வாடிகன் நகரின் சுற்றளவு, 0.17சதுர மைல்கள் தான். இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமாக உள்ளது. அங்கு உள்ள, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தான் பிரதான டூரிஸ்ட் ஸ்பாட். அதோடு, புனித பீட்டர் அப்போஸ்தலரின் கல்லறை, தலைமை போப்பின் இல்லம் ஆகியவையும் இந்த குட்டி நாட்டில் உள்ளது.
வாடிகன் நகரில் நீங்கள் செய்யக்கூடாதவை
வாடிகன் நகரில், ஒரு அரசு மாளிகை, ஒரு அருங்காட்சியகம், 2 கல்வி நிறுவனங்கள், மற்றும் சில வீடுகளும் கடைகளும் மட்டுமே மொத்த கட்டடங்கள். கிட்டத்தட்ட எண்ணூற்றி சொச்சம் மக்கள் தான் அங்கே வசிக்கின்றனர். குறைவான மக்கள் என்பதால்,இங்கே சிறைகள் இல்லை. குற்றம் புரிபவர்கள், இத்தாலி சிறையில் அடைக்கப்படுகின்றனர். போப் ஆண்டவரை பாதுகாக்க பணியில் இருப்பவர்கள் சுவிஸ் போலீசார். இது புனித நகரம் என்பதால், உடலை வெளிப்படுத்தும் உடைகளை அணியக்கூடாது. அதே போல, அங்கே இருக்கும் கலை ஓவியங்களை கிண்டலடித்து சிரிக்க கூடாது. தேவாலயங்களில் எப்போதும் அமைதி காக்க வேண்டும்.