ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனக்கு கொடுக்கப்பட்ட "சிறப்பு மரியாதைக்கு" தனது "நண்பர்" அல்பனீஸ்க்கு நன்றி தெரிவித்தார்.
"இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே ஒரு பாலமாக புலம்பெயர்ந்தோர் இருக்கிறார்கள். சிட்னியில் உள்ள ஹாரிஸ் பூங்காவில் இந்திய சமூகம் அதிகம் வசிக்கும் இடத்தில் கட்டப்படவுள்ள 'லிட்டில் இந்தியா' நுழைவாயிலின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்." என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
details
அதிக அளவிலான இந்தியர்கள் வாழும் பகுதி 'லிட்டில் இந்தியா' என்று பெயரிடப்பட்டது
ஹாரிஸ் பார்க் பகுதியில் ஒரு பெரிய இந்திய சமூகம் வசித்து வருகிறது. மேலும், இந்த பகுதியில் இந்திய உணவு வகைகள் மற்றும் இந்தியர்களுக்கு சொந்தமான வணிகங்களுக்கள் அதிகம் உள்ளன.
"வளர்ச்சியடைந்த, பன்முக கலாச்சார மையமாக ஹாரிஸ் பார்க் திகழ்ந்து வருகிறது. மேலும், அங்கு அதிகமான இந்திய மக்கள் வசிக்கின்றனர்" என்று ஆஸ்திரேலிய அரசாங்க வலைத்தளம் கூறுகிறது.
ஹாரிஸ் பார்க் பகுதிக்கு அதிகாரப்பூர்வமாக 'லிட்டில் இந்தியா' என்று பெயரிடுவதற்கான முதல் முன்மொழிவு 2015இல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
'லிட்டில் இந்தியா' என்ற பெயர் "குழப்பத்தை உருவாக்குகிறது" என்பதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரமட்டா கவுன்சிலிடம் புவியியல் பெயர்கள் வாரியம் கேட்டு கொண்டதை அடுத்து முந்தைய முயற்சிகள் நிறுத்தப்பட்டன.