Page Loader
பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி 
இந்த விருந்தில் இந்திய பாரம்பரிய உணவுகளும் சிறுதானியங்களும் வழங்கப்பட்டன.

பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
May 22, 2023
11:29 am

செய்தி முன்னோட்டம்

இன்று(மே 22) பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார். இந்த விருந்தில் இந்திய பாரம்பரிய உணவுகளும் சிறுதானியங்களும் வழங்கப்பட்டன. குஜராத்தின் காந்த்வி, மலாய் கோஃப்தா, வெஜிடபிள் கோலாபுரி, தால் பஞ்சமெல் போன்ற இந்திய உணவுகள் இதில் அடங்கும். 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு மனிதகுலம் அறிந்த பழமையான உணவுகள் வழங்கப்படுவதை இந்திய பிரதிநிதிகள் உறுதி செய்துள்ளனர். ராஜஸ்தானிய ராகி கட்டா கறி மற்றும் சிறுதானிய பிரியாணி ஆகியவையும் இந்த விருந்தின் மெனுவில் சேர்க்கப்பட்டிருந்தது.

details

மசாலா டீ, கிரீன் டீ, புதினா டீ மற்றும் PNG காபி ஆகிய பானங்களும் வழங்கப்பட்டன

FIPIC உச்சி மாநாட்டின் விருந்தில் சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டது, சிறுதானிய உணவுகளுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐநா பொதுச் சபை, இந்திய அரசின் உத்தரவின் பேரில் 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. FIPIC விருந்தினர்களுக்கு மசாலா சாஸ்(கிரீமி தயிர் மற்றும் இந்திய மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட கோடைகால பானம்) என்பதும் வழங்கப்பட்டது. விருந்தின் போது, பான் குல்பி மற்றும் ரப்டி இனிப்புகளாக பரிமாறப்பட்டன. பப்புவா நியூ கினியாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமரான பிரதமர் மோடி, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின்(FIPIC) மூன்றாவது உச்சிமாநாட்டை பப்புவா நியூ கினியாவின் பிரதமருடன் இணைந்து இன்று நடத்தினார்.