Page Loader
இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை! 
இந்தியாவின் ஒரு சதவீத செல்வந்தர்களில் ஒருவாராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!!

இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை! 

எழுதியவர் Arul Jothe
May 17, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்று கேட்டால், ஒரு சிலரின் பெயரை உடனே சொல்லிவிட முடியும். செல்வந்தர் என்றால் ஒரு நல்ல வீடு, விலையுயர்ந்த கார் & பிற சொத்துக்களை வைத்திருப்பது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உலகின் ஒரு சதவீத செல்வந்தர்கள் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளனர். உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம், ஒரு சதவீத செல்வந்தர்களில் ஒருவராக சேர ஒருவரிடம் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா ரூபாயின் மதிப்பில் உங்களிடம் 1.44 கோடி ரூபாய் இருந்தால், நீங்கள் பட்டியலில் இணையலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா 22வது இடத்தில் உள்ளது.

Survey of Richest 

பில்லியனர்கள் பட்டியல்

2023 பில்லியனர்கள் பட்டியலில் 169 இந்தியர்கள் இருந்தனர், இது கடந்த ஆண்டு 166 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் தனது சொத்து மதிப்பு எட்டு சதவிகிதம் சரிந்த போதிலும், முகேஷ் அம்பானி இந்தியாவின் மற்றும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த அறிக்கைகள் வைரஸ் தொற்றுநோய், அதிகரித்து வரும் செலவுகள் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை எவ்வாறு விரிவுபடுத்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.