Page Loader
கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!
கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!

கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!

எழுதியவர் Arul Jothe
May 20, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான். அதன் சுவையும், அழகிய ஊதா நிற கவரும் நம்மை வசீகரிக்கும். அந்த பர்ப்பிள் நிற கவருக்கும், இங்கிலாந்தின் அரச குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என உங்களுக்கு தெரியுமா? ஆம், 1914 ஆம் ஆண்டு முதல், பிரிட்டன் அரசி விக்டோரியா மகாராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஊதா மற்றும் தங்க நிறத்தை தன்னுடைய தயாரிப்புகளில் பயன்படுத்துவதாக, கேட்பரி டெய்ரி மில்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Cadbury

சட்ட சிக்கலில் சிக்கிய 'டெய்ரி மில்க்'

டெய்ரி மில்க் நிறுவனத்தின் இந்த பர்ப்பிள் நிற பயன்பாட்டிற்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர், சட்ட சிக்கல் ஏற்பட்டது. 2004 ஆம் ஆண்டில், கேட்பரி நிறுவனத்தின் போட்டியாளராக கருதப்படும் நெஸ்லே நிறுவனம், பர்ப்பிள் நிறம், கேட்பரி நிறுவனத்தின் trademark அல்ல என்று வழக்கு தொடர்ந்தது. சட்ட போராட்டம் நடைபெற்ற நேரத்தில், 'கேட்பரி பர்ப்பிள்' என்ற நிறத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2012 ஆம் ஆண்டில், நெஸ்லேவின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், "கேட்பரி நிறுவனத்தின் ஊதா நிறம், தனித்தன்மை வாய்ந்தது" என உத்தரவிட்டது. இருப்பினும், நெஸ்லே உட்பட மற்ற போட்டியாளர்கள், ஊதா நிறத்தில், வேறு shade-களை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டது.