
கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 16-ஆம் தேதி துவங்கிய, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்து வருகிறார்கள்.
வித்தியாசமான உடைகளில் பிரபல நட்சத்திரங்கள் அணிவகுக்கும் இந்த திரைப்பட விழாவில், இந்திய திரையுலகிலிருந்தும் பலரும் கலந்து கொண்டனர்.
ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், இந்த விழாவில், விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார்.
தான் கலந்து கொண்ட வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.
அதோடு பல புகைப்படங்களையும் பதிவேற்றி வந்தார். அதில் தற்போது வைரலாகி வரும் புகைப்படம், 90 களின் ஸ்பைடர்மேனாக வலம் வந்த டோபி மாகுயருடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி.
அதுமட்டுமல்லாமல், பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்புடன் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A big moment for #VigneshShivan! ✨#TobeyMaguire #Cannes2023https://t.co/wU7uTXHD2I
— @zoomtv (@ZoomTV) May 21, 2023