மத்திய அரசு: செய்தி
மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
இந்தியாவில், அடுத்த வருடம், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது.
'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாக(UTs) பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்
தென்னிந்தியாவில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
மத்திய அரசின் இன்றைய ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் சில ஆண்டுகளில் பெரும் நடுத்தர வர்க்க மக்களை கொண்ட சமூகமாக இந்தியா மாறும் என டெல்லியில் நடைபெற்ற பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
ஒரு டன் 1200 டாலருக்கும் குறைவாக வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பாஸ்மதி அரிசி சரக்குகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
தற்போதைய பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், உள்நாட்டில் விலையை நிலைப்படுத்தவும், சரக்குகளை அதிகரிக்கவும், புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரியை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை
இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டி மத்திய வீட்டு வசதி நகர்ப்புற உறவுகளுக்கான அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.
FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?
FAME II திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.50.02 கோடியாக திரும்பச் செலுத்தியிருக்கிறது, ஹரியானாவைச் சேர்ந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம்.
டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்
சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன?
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்து, கார்பன் உமிழ்வைக் குறைக்க, வருங்காலத்தில் எரிபொருள் வாகனங்களைத் தடை செய்து, எலெக்ட்ரிக் வாகனங்களை முதன்மையாக்க அனைத்து நாடுகளும் திட்டங்களை வகுத்து வருகின்றன.
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு
இந்தியா, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு
பள்ளி கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தது.
ஜிஎஸ்டி வரி கட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு?
ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்கள், ரூ.1 கோடி வரை பரிசு வெல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல்
மத்திய அமைச்சகங்களியிலேயே உள்துறை அமைச்சகத்தில் தான் அதிக ஊழல் புகாா்கள் பதிவாகியுள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) தெரிவித்துள்ளது.
மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவம் மாறிப் பொழிந்த மழையின் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கூறிய மாநிலங்களில் விளைந்த வெங்காயத்தின் ஆயுட்காலம் குறைந்திருக்கிறது.
வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு
இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க, வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஏற்றுமதி வரியானது இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு.
சிறுபான்மையின மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி அம்பலம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மிகப்பெரிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மோசடியை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம்
18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் பரஸ்பர ஒப்புதலுடன் உடலுறவு கொள்வதை குற்றமற்றதாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அரசு எரிபொருள் விலையை குறைக்கும் என கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார்.
சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அதன் விற்பனையும் தொடர்ந்து குறைந்து வருவதாகத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கேர் ரேட்டிங் நிறுவனம்.
சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்
இந்தியாவில் மோசடி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு சிம் கார்டு எண்ணைக் கொண்டு பல்வேறு மோசடிச் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது 'DigiLocker' கணக்கு வைத்திருப்பதும் அவசியம்
இனி இந்தியாவில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசின் டிஜிலாக்கர் (Digilocker) செயிலியிலும் கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. சர்வதேச பயணங்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்ப விதிமுறையில் இது முக்கியமான மாற்றமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு
மதுரையில் AIIMS அமையும் என மத்திய அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதன் கட்டுமானத்திற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அண்மை காலமாக எடுத்து வருகிறது.
இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்
கடந்த 11ம் தேதியோடு நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது.
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை கடந்த ஜூலை 31-ம் தேதி டன்னுக்கு ரூ.1,600-ல் இருந்து ரூ.4,250 ஆக உயர்த்தியது மத்திய அரசு. தற்போது இன்று முதல் மீண்டும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
இந்திய தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காக மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்களை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
தங்களது புதிய லோகோ மற்றும் புதிய விமான அடையாளங்களை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். முன்னரே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றியது டாடா குழுமம்.
கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் 3-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இன்று மக்களவை தொடங்கிய பின்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இருந்து நீக்க மசோதா தாக்கல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை
ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்
பிரதமரின் ஜன் யோஜனா திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு திட்டங்களில் மட்டுமே, எவ்வித வைப்புத்தொகையினையும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்.
உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு
முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கும் மத்திய அரசு திட்டமான தேசிய சமூக உதவித் திட்டத்தை(NSAP) செயல்படுத்தும் போது தவறுதலாக உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு
இந்தியா: சில முக்கிய சந்தைகளில் வெங்காயத்தின் இருப்பு குறைந்து வருவதால், தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.