பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்
தென்னிந்தியாவில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டில் இருந்து ஜூன் மாதம் 2020ம் ஆண்டின் காலகட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 62.37 லட்ச வாகனங்கள் அதாவது 53.27 சதவிகிதம் விஐபி வாகனங்கள் என்பதால் அதற்கான கட்டணத்தினை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
'பாஜக மாடல் டோல்கேட்' என்றே அழைக்கலாம் - எம்.பி. சு.வெங்கடேசன்
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன், "பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளமாக மாறியுள்ளது. இனி இதனை 'பாஜக மாடல் டோல்கேட்' என்றே அழைக்கலாம்" என்று கூறியுள்ளார். இதே போல் ஆத்தூர் சுங்கச்சாவடியினை கடந்து சென்ற 88.92 லட்ச வாகனங்களுள் 32.39 லட்சம் வாகனங்கள் அதாவது 36.43 சதவிகிதம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, ஜனவரி-செப்டம்பர் 2020ம் ஆண்டின் காலக்கட்டத்தில் லெம்பலகுடி சுங்கச்சாவடியில் 18.32%, கனியூர் சுங்கச்சாவடியில் 11.12%, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 12.60%, கப்பலூர் சுங்கச்சாவடியில் 25.08% என குறிப்பிட்ட சதவிகித விஐபி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்