NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு 
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைந்து முடிக்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 17, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் AIIMS அமையும் என மத்திய அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதன் கட்டுமானத்திற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.

    இறுதியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக அடுத்தகட்ட நகர்விற்காக மத்திய அரசு முன்னெடுத்துள்ளது என்ற செய்தி, மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் மருத்துவமனைக்கான அடிக்கல்லை, பிரதமர் மோடி நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தமிழக அரசு கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தது.

    இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரின் போது நடைபெற்ற, மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா விவாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "மதுரையில் கட்டாயம் எய்ம்ஸ் அமையும்" என குறிப்பிட்டார்.

    card 2

    33 மாதங்களில் கட்டுமானத்தை முடிக்கவேண்டும் என நிபந்தனை 

    மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்கள், தற்சமயம் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர் என நிதியமைச்சர் அந்த விவாத கூட்டத்தில் தெரிவித்தார்.

    அதேபோல, ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் பெற்று, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    தற்போது, அதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 18 தேதிக்குள், கட்டுமான பணிக்கான தகுதியான ஒப்பந்தக்காரர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு சார்பாக, டெண்டர் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதோடு, 33 மாதங்களில் கட்டுமான பணிகளை நிறைவு செய்திட வேண்டும் எனவும் நிபந்தனை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    எய்ம்ஸ்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மதுரை

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு கோவில் திருவிழாக்கள்
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை

    மத்திய அரசு

    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு ராமேஸ்வரம்
    'ஓபன்ஹைய்மர்' திரைப்படத்தில் வரும் பகவத் கீதை காட்சிகளால் பரபரப்பு  ஹாலிவுட்
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025