வருமான வரி விதிகள்: செய்தி

21 May 2023

இந்தியா

எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?

வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?

மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

வருமான வரித் தாக்கல் செய்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கும் மேல் வருடாந்திர வருவாய் ஈட்டும் அனைவரும் கண்டிப்பாகவும் சரியாகவும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

வருமான வரித் தாக்கலின் போது வருமான வரி கட்டாமல் விட்டாலோ அல்லது பாக்கி வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒருவர் வருமானத்தை குறைத்துக் காட்டினாலும் வருமான வரித்துறை நம் மீது நடவடிக்கை எடுக்கும்.

புதிய அல்லது பழைய வருமான வரிமுறை.. எதுவென தேர்ந்தெடுங்கள்! 

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நடப்பு நிதியாண்டில் இந்த புதிய வருமான வரிமுறை அமலுக்கு வரும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.