LOADING...
பட்ஜெட் 2026: ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி அடுக்குகள் அமல்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி அடுக்குகள் அமல்

பட்ஜெட் 2026: ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி அடுக்குகள் அமல்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
02:21 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி முறையானது (New Tax Regime), நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக லாபம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் கீழ், ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை இருந்தால், அவர் எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லை. வருமானம் ரூ.4 லட்சத்தைத் தாண்டி ரூ.8 லட்சம் வரை இருக்கும்போது, அதற்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

வரி

நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினருக்கான வரி

வருமானம் இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில், வரி அடுக்குகளும் அதற்கேற்ப உயர்கின்றன. ஒருவரின் வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இருந்தால் 15 சதவீத வரியும், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருந்தால் 20 சதவீத வரியும் செலுத்த வேண்டும். அதேபோல், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இறுதியாக, ரூ.24 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.

சலுகை

சம்பளதாரர்களுக்கான சிறப்புச் சலுகை

மேலே குறிப்பிட்ட வரி அடுக்குகளைத் தவிர, சம்பளம் பெறுபவர்களுக்கு ஒரு கூடுதல் சலுகை உள்ளது. அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய ரூ.75,000 நிலையான கழிவு மற்றும் செக்ஷன் 87Aஇன் கீழ் கிடைக்கும் வரி தள்ளுபடி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருப்பவர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவையில்லை. இந்த புதிய வரிச் சட்டம் 2025இன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement