நாம் செலுத்தும் வாடகை வருமான வரியில், எந்தெந்த வகையில் வரிவிலக்கு பெற முடியும்
ஒரு தனிநபர் தனக்கு அனைத்து வகைகளில் இருந்து வரும் வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய அவசியம். அந்த வகையில், வீட்டு வாடகையின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டியது அவசியம். அப்படி செலுத்தப்படும் வாடகை வருவாய் வரியில் இருந்து எந்தெந்த வகையில் வரி விலக்கு பெற முடியும்? பார்க்கலாம். வீட்டுச் சொத்து வருமானம் எனக் குறிப்பிடப்படும் இந்தப் பிரிவின் கீழ், வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், அலுவலக இடங்கள் ஆகியற்றின் மூலம் கிடைக்கும் வாடகை வருவாயும் அடங்கும். ஒரு தனிநபர் குறிப்பிட்ட ஆண்டில் மொத்தமாக எவ்வளவு வருவாயை வீட்டு வாடகையின் மூலம் பெற்றிருக்கிறார் என்பதை வைத்து இந்த வாடகை வரியானது கணக்கிடப்படுகிறது.
வாடகை வரியில் வரி விலக்குகள்:
வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டிற்கு நாம் செலுத்தும் நகராட்சி வரியினை, வருமான வரியில் இருந்து வரிவிலக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டினை, கடன் பெற்று நாம் கட்டியிருக்கும் பட்சத்தில், அந்த கடனிற்கான வட்டித் தொகையை வரிவிலக்காக நாம் கோர முடியும். ஆனால், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டும் இந்த வகையில் நாம் வரிவிலக்கு கோர முடியும். வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீட்டின் பராமரிப்புச் மற்றும் பழுது நீக்குவது ஆகியவற்றுக்காக நிலையாக 30% வரி விலக்காக அளிக்கப்படுகிறது. இந்த வரிவிலக்குகளைக் கடந்து மீதம் இருக்கும் தொகைக்கு நாம் வரி செலுத்தினால் போதுமானது. அதுவும், ஒரு நிதியாண்டில் நாம் பெறும் வீட்டு வாடைகை, ரூ.2.5 லட்சத்திற்குள்ளாக இருக்கும் பட்சத்தில், அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.